Friday, April 28, 2006

நீண்ட நாள் ஆசை..வலைப்பதிவில் எனக்கும் ஒரு இடம் வேண்டும் என்று! இன்று ஒரு வழியாய் தொடங்கி விட்டேன்.

ஏழாவது வகுப்பு படிக்கின்ற காலத்தில், எனது அண்ணனின் நண்பர்களால் தொடங்கி நடத்தப்பட்ட கையெழுத்துப் பத்திரிக்கை ('முகில்' என்பதாய் நினைவு), எனக்கும் அது போல எழுத வேண்டும் என்ற ஆவலைத் தூண்டியது. அதைத் தொடர்ந்து, 'வெண்ணிலா' என்ற பெயரில் சிறுவர் கையெழுத்துப் பிரதி உருவாயிற்று. பத்தாவது வகுப்பு வரையில் தொடர்ந்தது. பின்னர், படிப்பின் நிமித்தமாக, நட்புக்கூட்டம் கலையவே, நின்று போனது.

தற்செயலாய், வலைப்பதிவு குறித்து தேடுகையில், பல்வேறு வலை முனைவோரின் பக்கங்கள், எனது 'வெண்ணிலா' வின் நினைவினை, 'மின்மினி'யாய் சிமிட்டி விட்டது. அந்த மின்மினி பெயர் கொண்டே தொடங்கி விட்டேன். என்னுள் பூக்கும் 'மின்மினி'ச் சிதறல்களை, இவ் வலைப்பதிவில், தூறல்களாக்க விழைகிறேன்..

மீண்டும் சந்திப்போம்...

ச.சிவா

6 Comments:

said...

வாங்க சிவா..நல்வரவு...

said...

vaanga vaanga,
Nerriya eludunga siva.
Vazhthukkal

said...

வாங்க சிவா,

உங்களுடைய வரவு நல்வரவாகட்டும்.

மின்மினிங்கற பேரு நல்லாருக்கு.

உங்க பதிவுக்கு ஒடனே அங்கீகாரம் கிடைக்காட்டியும் கவலைப்படாம எழுதுங்க. பின்னூட்டங்களுக்கு ஆசைப்பட்டு தரமில்லாத பதிவுகள தராதீங்க. ஒங்களுக்குன்னு ஒரு தனி ஸ்டைல் வச்சிக்கிட்டு எழுதிக்கிட்டே போங்க. பின்னூட்டங்கள் தானாக வரும்..

வாழ்த்துக்கள்

said...

நன்றி ரவி,கார்த்திக், ஜோசப்..

said...

நன்றி ரவி,கார்த்திக்,ஜோசப்..

said...

சிவா, இன்று தான் உங்கள் பதிவிற்குள் நுழைந்தேன். நல்ல அறிமுகத்துடன் தொடங்கியிருக்கிறீர்கள். சிறு பத்திரிகை நடத்திய உங்கள் அனுபவத்தின் மூலம் நல்ல பல ஆக்கங்களை அனைவருக்கும் பயன்படும் விதத்தில் உருவாக்குவீர்கள், உருவாக்கவேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

மஞ்சூர் ராசா
http://manjoorraja.blogspot.com/
http://muththamiz.blogspot.com/
குழுமம்:http://groups.google.com/group/muththamiz