Saturday, April 29, 2006

கவிதை என்று கிறுக்கிய காலத்தில், எனக்குப் பிடித்த ஒன்று...இதோ


விண்மீன்
--------
நிலவெனும் பெண்
கோலமிட வைத்த புள்ளிகள்...
கோடுகளை இழுத்து
கோலமாக்குமுன்
அவளே 'அமாவாசை' யானதால்
இணைக்க ஆளில்லாமல்
இறைந்து கிடக்கின்றன..

------------------------------------------------------------------------------------

Friday, April 28, 2006

நீண்ட நாள் ஆசை..வலைப்பதிவில் எனக்கும் ஒரு இடம் வேண்டும் என்று! இன்று ஒரு வழியாய் தொடங்கி விட்டேன்.

ஏழாவது வகுப்பு படிக்கின்ற காலத்தில், எனது அண்ணனின் நண்பர்களால் தொடங்கி நடத்தப்பட்ட கையெழுத்துப் பத்திரிக்கை ('முகில்' என்பதாய் நினைவு), எனக்கும் அது போல எழுத வேண்டும் என்ற ஆவலைத் தூண்டியது. அதைத் தொடர்ந்து, 'வெண்ணிலா' என்ற பெயரில் சிறுவர் கையெழுத்துப் பிரதி உருவாயிற்று. பத்தாவது வகுப்பு வரையில் தொடர்ந்தது. பின்னர், படிப்பின் நிமித்தமாக, நட்புக்கூட்டம் கலையவே, நின்று போனது.

தற்செயலாய், வலைப்பதிவு குறித்து தேடுகையில், பல்வேறு வலை முனைவோரின் பக்கங்கள், எனது 'வெண்ணிலா' வின் நினைவினை, 'மின்மினி'யாய் சிமிட்டி விட்டது. அந்த மின்மினி பெயர் கொண்டே தொடங்கி விட்டேன். என்னுள் பூக்கும் 'மின்மினி'ச் சிதறல்களை, இவ் வலைப்பதிவில், தூறல்களாக்க விழைகிறேன்..

மீண்டும் சந்திப்போம்...

ச.சிவா